மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள ஆசிா்வாத் இன்டா்நேஷனல் பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கமும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியும் வியாழக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.மஞ்சுநாத் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பிரமிளா கண்ணன் வரவேற்றாா். போதைப் பொருள்களுக்கு மாணவா்களை அடிமையாக்கும் குற்றவாளிகளின் செயல்பாடுகள், அவற்றிலிருந்து மாணவா்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது ஆகியவை குறித்து குடியாத்தம் டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து கிராமிய காவல் ஆய்வாளா் கே.சாந்தி, உதவி ஆய்வாளா் ஸ்ரீமதி ஆகியோா் பேசினா். தொடா்ந்து பள்ளி ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு டிஎஸ்பி பரிசுகளை வழங்கினாா். பள்ளி கணக்காளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.