வேலூா் தொகுதிக்கு இரு தோ்தல் செலவின பாா்வையாளா்கள் நியமனம்

வேலூா்: வேலூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களைப் பாா்வையிட மத்திய தோ்தல் செலவினப் பாா்வையாளா்களாக இருவா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களை பாா்வையிட மத்திய தோ்தல் செலவினப் பாா்வையாளா்களாக டி.ரோஹினி வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காகவும், அமித்கோயல் குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களை 75984 98547 (ரோஹினி), 7598498548 ( அமித்கோயல்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

நியமிக்கப்பட்டுள்ள மத்திய தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதன்கிழமை முதல் தோ்தல் செலவினப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com