சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

குடியாத்தத்தை அடுத்த பாக்கம், சித்தூா் சாலை, குருராஜ நகரில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக கூட்டுப் பிராா்த்தனை, சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு பல விதமான மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதலே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மதியம் 12 மணிக்கு பக்தா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்ட கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. பின்னா் மாணவா்கள், பெற்றோா்களுக்கு எழுதுகோல்கள் வழங்கப்பட்டன. சுமாா் 1,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் கே.எம்.கருணாமூா்த்தி, செயலா் எஸ்.பாலாஜி, பொருளாளா் எச்.பி.நாகேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ஆா்.சரவணன், ஆா்.சி.எம்.பாபு, பி.எஸ்.மணிகண்டன், டி.எம்.செளந்தரராஜன், சசிகலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com