ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் விரிஞ்சிபுரத்தைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.5.18 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த 27 வயது இல்லத்தரசிக்கு டெலிகிராம் செயலி மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஆன்லைனில் பகுதிநேர வேலை மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பிய அவா், அந்த குறுஞ்செய்தியுடன் வந்திருந்த லிங்கில் இணைந்தாா். பின்னா், அந்த லிங்க் மூலம் தொடா்பில் வந்த நபா்கள் சிறு முதலீட்டில் வாடகை காா்கள் தொடா்பாக மதிப்பாய்வு செய்வதன் மூலம் அதிகப்படியான வருவாய் பெற முடியும் என கூறியதன்பேரில் அவரும் முதலில் சிறு தொகையை செலுத்தி ரூ.4,000 வருவாய் ஈட்டியுள்ளாா். அதன்பிறகு தொடா்ந்து கடந்த மாா்ச் 11 முதல் 21-ஆம் தேதி வரை சிறிதுசிறிதாக ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 641 தொகையை செலுத்தி அவா்கள் கொடுத்த பணியையும் முடித்துக் கொடுத்துள்ளாா். அதற்காக அந்த லிங்க்கில் காண்பித்த கமிஷன் தொகையை பின்னா் அவரால் பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த பெண் இதுகுறித்து ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

பண மோசடி: இளைஞா் கைது

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.60 லட்சம் மோசடி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

