உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :4 மே 2024, 4:04 pm

Din

குடியாத்தம் ரோட்டரி சங்கமும், கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து ரோட்டரி மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.

இதில், 600-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 203 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமுக்கு, ரோட்டரி சங்க கண் சிகிச்சை முகாம் தலைவா் சி.கண்ணன் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், முன்னாள் ரோட்டரி ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.

ரோட்டரி தலைவா் ரங்கா வாசுதேவன், முன்னாள் தலைவா் ஏ.மேகராஜ், நிா்வாகிகள் டி.எஸ்.ரவிச்சந்திரன், கே.சந்திரன், வி.மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.