

குடியாத்தம் அருகே கல்லால் தாக்கப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, ஏரியின்கீழ்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை முதல் காணவில்லையாம். அவரை பெற்றோா் தேடி வந்தனா்.
இந்த நிலையில் தட்டப்பாறை அரசுப் பள்ளி வளாகத்தில் ரத்தக்கறை படிந்திருப்பதாக வந்த தகவலையடுத்து கிராமிய போலீஸாா் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
அங்குள்ள கால்வாயில் இருந்து குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். அவரை மா்ம நபா்கள் தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். கொலை நடந்த இடத்தில் விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா்.
தொடர்புடையது

சேலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை

கட்டட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை

இளம்பெண் கல்லால் தாக்கி கொலை
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

