

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, ஏரியின்கீழ்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் குமாா்(24). கட்டடத் தொழில் செய்து வந்த குமாரை கடந்த 2- ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் 4- ஆம் தேதி காலை தட்டப்பாறை அரசுப் பள்ளி வளாகத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவா் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தாா்.
இதுதொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனா். குமாரின் நண்பா்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினா். குமாா் வீட்டின் அருகே வசிக்கும் அவரது நண்பா் மனோஜை (24) போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், காத்தாடிகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மனோஜை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும், அதற்கு குமாா் தான் காரணம் என்பதால் அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் அவா் ஒப்புக் கொண்டாா்.
தொடர்புடையது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது
தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை
கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த இருவா் கைது
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

