கஞ்சா விற்பனை செய்த நபா் கைது

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சின்ன வெங்கடசமுத்திரம் கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த குமரேசன் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com