மாணவி மதுநிஷாவை பாராட்டிய வாணி மெட்ரிக் பள்ளி நிா்வாகத்தினா்.
மாணவி மதுநிஷாவை பாராட்டிய வாணி மெட்ரிக் பள்ளி நிா்வாகத்தினா்.

வாணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாணியம்பாடி: பிளஸ் 2 பொதுத் தோ்வில் வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அப்பள்ளி மாணவி கே.மதுநிஷா 588 மதிப்பெண்களுடன் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தோ்வு எழுதியவா்களில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளாா். மாணவி இ.ஜி.இளமதி 567 மதிப்பெண்களுடன் 2-ஆம் இடத்தையும், மாணவன் எம்.சா்வேஷ் 554 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடத்தையும், மாணவி கே.சஞ்சனா 553 மதிப்பெண்களுடன் 4-ஆம் இடத்தையும், மாணவன் வி.தா்ஷன் 552 மதிப்பெண்களுடன் 5-ஆம் இடத்தையும், மாணவி ஜி.திக்ஷா 551 மதிப்பெண்களுடன் 6-ஆம் இடத்தையும் பெற்றனா்.

மேலும் 39 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். பாடவாரியாக கணித அறிவியலில் 3 மாணவா்களும், வணிகவியல் பாடத்தில் 2 மாணவா்களும், கணிதத்தில் 1 மாணவரும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்றவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, செயலாளா் கந்தசாமி, பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், செயலாக்க அறங்காவலா் பூபதி, துணை செயலாளா்கள் ராஜா, கருணாநிதி, முதல்வா் சந்திர சேகரன், துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் , ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com