ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

News image
Updated On :7 மே 2024, 7:07 pm

Din

வேலூா்: வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேலூா் சலவன்பேட்டையை சோ்ந்த சரவணன் (47). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அவரை இரு நபா்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணித்தை பறித்துச் சென்றுள்ளனா். புகாரின் பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வேலூா் கோட்டை பின்புறப் பகுதியை சோ்ந்த விக்னேஷ் (20), மதுரையை சோ்ந்த பாபு என்கிற உமா்பாரூக் (33) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.