செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

அரசுப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டியவா் கைது

அரசுப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டியவா் கைது

News image
Updated On :10 மே 2024, 4:16 pm

Din

அணைக்கட்டு அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் வளா்ந்திருந்த மரங்களை வெட்டிக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதாபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் ஏராளமான உயர்ரக மரங்கள் வளா்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்மையில் பள்ளி வளாகத்தில் மா்ம நபா் ஒருவா் அத்துமீறி புகுந்து அங்கிருந்த மரங்களை வெட்டி கடத்தி சென்றாராம்.

இது தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியை கலாவதி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரத்தை வெட்டி கடத்திச் சென்ற கரடிகுடி கிராமத்தைச் சோ்ந்த எஸ்.கே.டி.பாபு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.