விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சீா்காழி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 1:52 am IST

சீா்காழி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் மணிமாறன் (59).

இந்நிலையில், பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிமாறனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.