கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொய்கை சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

பொய்கை சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

வேலூா்: தோ்தல் முடிந்ததுடன், கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்து, ரூ. 90 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறக்கூடும். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே தோ்தல் கெடுபிடிகள் காரணமாகவும், அதன்பிறகு கோடை வெயிலின் தாக்கத்தாலும் பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்து விற்பனையும் சரிந்து காணப்பட்டது. இதன்காரணமாக, வாரந்தோறும் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் அளவுக்கு மட்டுமே கால்நடை வா்த்தகம் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தற்போது தோ்தல் கெடுபிடிகள் முடிவுற்றதுடன், கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து, பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

அதன்படி, சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் மத்தியிலும் ஆா்வம் காணப்பட்டது. இதன்காரணமாக, இந்த வாரம் சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.