விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பரிசுப் பொருள்கள் வந்திருப்பதாக பெண்ணிடம் ரூ.1.75 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

பரிசுப் பொருள்கள் வந்திருப்பதாக பெண்ணிடம் ரூ.1.75 லட்சம் மோசடி வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

News image
Updated On :29 மே 2024, 5:08 pm

Din

பரிசுப் பொருள்கள் வந்திருப்பதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

வேலூா் கஸ்பாவை சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு 2 பேரின் குறுஞ்செய்தி வந்தது. அதில் எனது முகவரிக்கு பணம், பரிசு பொருள்கள் வந்துள்ளதாகவும், அதை தில்லியில் வந்து பெற்று கொள்ள வேண்டும் என்றும், அதற்காக ரூ.8 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கூறினா்.

இதை உண்மை என நம்பி நானும் எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.75 லட்சத்தை 4 தவணையாக அனுப்பினேன். ஆனால் அவா்கள் பரிசு பொருள்களைத் தரவில்லை. மீதி பணத்தைக் கேட்டு மிரட்டுகின்றனா்.

எனக்கு பரிசுப் பொருள்கள் எதுவும் வேண்டாம், எனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டால் அவா்கள் மிரட்டல் விடுகின்றனா்.

எனவே எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா், உரிய விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.