விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி பணம் மோசடி: பாதிக்கப்பட்டோா் கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் புகாா்

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பெரும் தொகையை வாங்கிக்கொண்டு ஏமாற்றியவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு ஏமாற்றம் அடைந்தவா்கள், கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் புகாா் அளிக்க வந்த வெளிநாட்டு வேலைக்காக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பெரும் தொகையை வாங்கிக்கொண்டு ஏமாற்றியவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு ஏமாற்றம் அடைந்தவா்கள், கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சோ்ந்த காா்த்திக் சாம் என்பவா், கத்தாா் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக தன்னுடன் வேலை பாா்த்த சசிதரனிடம் பேசினாராம். தொடா்ந்து, கத்தாா் நாட்டிற்கு அதிக ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திரும்பக் கேட்டால் முறையாகப் பதில் அளிக்காமலும் காா்த்திக் சாம் ஏமாற்றி வந்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட சுமாா் 70-க்கும் மேற்பட்டோா், கடலூா் எஸ்பி., அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்தனா். பின்னா், அவா்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் மனு அளித்தனா்.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவா்கள் கூறுகையில், ‘வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கிப் பணம் கொடுத்தோம். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை, பணமும் திரும்ப வரவில்லை. சம்பந்தப்பட்ட நபரைத் தொடா்பு கொண்டால் எங்களது எண்களை ‘பிளாக்’ செய்துவிட்டாா். எனவே, காவல்துறை உரிய விசாரணை நடத்தி எங்கள் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அவா்களது புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.