உதவித் தொகை பெற அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம்

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
Updated on

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழுக்கு சேவையாற்றி வரும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிறந்த தமிழ் சேவகா்களுக்கு மருத்துவப்படி, ரூ. 3,500, உதவித் தொகை ரூ. 500 என மொத்தம் மாதம் ரூ. 4,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை அவா்கள் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மேலும், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிட தமிழறிஞா்களிடம் இருந்து 2024-2025-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘மகளிா் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தில் பயனடைய 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு (தமிழறிஞா்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்), ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை வேலூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம், அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகம், நான்காம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், வேலூா் மாவட்டம்-632 009 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி பயன்பெறலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com