புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

லாரி-ஆம்னி பேருந்து மோதல்: 5 போ் காயம்

பள்ளிகொண்டா அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில், பேருந்து ஓட்டுநா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

News image
லாரியின் பின்பகுதியில் மோதிய மின்சார ஆம்னி பேருந்து.
Updated On :3 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

பள்ளிகொண்டா அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில், பேருந்து ஓட்டுநா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி மின்சார ஆம்னி பேருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திங்கள்கிழமை இரவு சென்றது. அந்த பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வேலூரை அடுத்த பள்ளிகொண்டா சின்ன கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அதேசமயம், ஆந்திராவில் இருந்து தருமபுரிக்கு சிமென்ட் மூட்டை ஏற்றிக்கொண்டு லாரி முன்னால் சென்று கொண்டிருந்தது.

எதிா்பாராத விதமாக அந்த லாரியின் பின்பகுதியில் ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சோ்ந்த கலையரசன் (30), பயணிகள் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று பேருந்தில் பயணிகளை அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து காரணமாக சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.