தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நியாய விலைக்கடையில் பிடிபட்ட பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நியாய விலைக் கடையில் பிடிபட்ட சாரைப் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

News image

நியாய விலைக் கடையில்  பிடிபட்ட  சாரைப்  பாம்பு.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

போ்ணாம்பட்டு அருகே நியாய விலைக் கடையில் பிடிபட்ட சாரைப் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

போ்ணாம்பட்டை அடுத்த கொத்தூா் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலைக்கடை இயங்கி வருகிறது. கடை விற்பனையாளா் சசிகலா கடையைத் திறந்தபோது கடையில் சுமாா் 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு இருந்தது தெரிய வந்தது.

தகவலின்பேரில் போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் நிலைய அலுவலா் உதயசந்திரன் தலைமையில் அங்கு சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட பாம்பை வனத்துறையினா் பாலூா் காப்புக்காட்டில் விட்டனா். இந்த பாம்பு அருகிலுள்ள புதா்களிலிருந்து வெளியேறி கடைக்குள் நுழைந்திருக்கலாம் என தீயணைப்புப் படையினா் தெரிவித்தனா்.