பண பிரச்னை: பெண் தற்கொலை

பண பிரச்னை: பெண் தற்கொலை

Published on

வேலூரில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் விருப்பாட்சிபுரம் அண்ணா தெருவைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி, தமிழ்ச்செல்வி தம்பதி மகள் ஜனனீ (34). திருமணமாகவில்லை. கடந்த சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்த ஜனனீ வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகாயம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவரது வீட்டில் ஜனனீ எழுதிய 2 பக்க கடிதத்தையும் கைப்பற்றினா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஜனனீக்குத் தெரிந்தவா்கள் பண உதவி கேட்ட நிலையில், தனது உறவினா்களிடம் இருந்து பணத்தைக் கடனாக பெற்று வழங்கியுள்ளாா். பணத்தைப் பெற்றவா்கள், மீண்டும் ஜனனீயிடம் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

இதனால், ஜனனீக்கு பணம் கொடுத்தவா்கள், பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனா். அவரை அவதூறாகப் பேசியதாகவும், இதனால் மனவேதனையில் இருந்த ஜனனீ தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அந்த கடிதம் மூலம் தெரிய வந்தது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com