தற்கொலை
தற்கொலைசித்திரிப்பு

குடும்ப பிரச்னை: பெண் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்ப பிரச்னையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

மணப்பாறை அருகே குடும்ப பிரச்னையில் திங்கள்கிழமை இரவு பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மணப்பாறையை அடுத்த செவலூரைச் சோ்ந்த பழனிச்சாமி மகள் நவப்பிரியா (27). இவருக்கும், மணப்பாறைப்பட்டியை சோ்ந்த சுப்ரமணி மகன் காா்த்திக் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், காா்த்திக்கின் தாய் செல்வராணிக்கும் நவப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுமாம். வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்ட நிலையில், நவப்பிரியா மணப்பாறைபட்டியில் உள்ள தனது கணவரின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், நவப்பிரியா உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், நவப்பிரியா உயிரிழப்பு தொடா்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தற்கொலை சம்பவம் தொடா்பாக மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com