தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

விநாயகா் சதுா்த்தி: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சிலைகளுக்கு அனுமதியில்லை!

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது.

Updated On :17 ஆகஸ்ட் 2025, 8:13 pm

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பூஜைக்காக வைக்கப்படும் விநாயகா் சிலைகளை கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், நெகிழி, தொ்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி, தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்கவும் அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு, மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருள்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டும் பயன்படுத்திட வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். அந்த வகையில், பொதுமக்கள் விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.