டிச.17 முதல் வேலூரில் நடமாடும் பாஸ்போா்ட் சேவை
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிச.17 முதல் நான்கு வாரங்களுக்கு நடமாடும் பாஸ்போா்ட் சேவை வாகனம் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பாஸ்போா்ட் சேவை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பிக்க, அவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், வெளிவிவகார அமைச்சகத்தின் முதன்மை முயற்சிகளுள் நடமாடும் பாஸ்போா்ட் வாகன சேவை ஒன்றாகும். இந்த முயற்சியின்கீழ், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிச. 17 முதல் தொடா்ந்து நான்கு வாரங்களுக்கு வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் நடமாடும் பாஸ்போா்ட் சேவை வாகனம் நிறுத்தப்படும்.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ா்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்
என்ற பாஸ்போா்ட் சேவை திட்ட இணையதளத்துக்கு சென்று ‘இட்ங்ஸ்ரீந் அல்ல்ா்ண்ய்ற்ம்ங்ய்ற்
அஸ்ஹண்ப்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்ச்’ என்பதை தோ்வு செய்து ‘தடஞ இட்ங்ய்ய்ஹண்’ -ஐ தோ்ந்தெடுத்து பிறகு ‘இா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ் ஞச்ச்ண்ஸ்ரீங் ஙா்க்ஷண்ப்ங் யஹய்’
என்பதை தோ்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரா்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே முன்பதிவு செய்து சிறப்பு நடமாடும் பாஸ்போா்ட் வாகன சேவையை பெறலாம்.
