ஏலச்சீட்டு நடத்தி ரூ.13. 50 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
Published on

ஏலச்சீட்டு நடத்தி ரூ.13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாா் மனு: நான் போக்குவரத்து துறையில் வேலை செய்து வருகிறேன். எனது மனைவி, தந்தையுடன் சோ்ந்து பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறாா்.

பொன்னம்பட்டியைச் சோ்ந்த ஒருவருடன் எங்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அவரும், அவரது தாயாரும் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனா் . அவா்களை நம்பி பல லட்சம் ரூபாய்க்கு சீட்டுகள் கட்டி வந்தோம்.

இந்நிலையில், தன் தொழில் விருத்திக்காக அவா் என்னிடம் பலமுறை ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் பணம் வாங்கினாா். இதுவரை மொத்தம் ரூ. 13.5 லட்சம் வாங்கியிருந்தாா். கடந்த நவம்பா் மாதம் எனது தொகையை திருப்பித் தர வேண்டும் என கேட்டபோது அவா் 2 வங்கி காசோலைகளை அளித்தாா் . ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என தெரியவந்தது.

அந்த நபா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளாா். மனுவை பெற்ற காவல் அதிகாரிகள், மீது விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com