வேலூரில் ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமியிடம் மனு அளித்த பொதுமக்கள்.
வேலூரில் ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமியிடம் மனு அளித்த பொதுமக்கள்.

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையால் பாதிப்பு: சிவபுரம் மக்கள் ஆட்சியரிடம் மனு

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சிவபுரம் கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
Published on

வேலூா்: சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சிவபுரம் கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் ஓல்டுடவுன் முருகா்கோயில் தெரு மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் அளித்த மனு: , குடியாத்தம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்பானை, மண்பாண்ட பொருள்கள் செய்ய தட்டப்பாறை, சாத்தான் ஏரிகளில் இருந்து களிமண் எடுத்து பயன்படுத்தி வந்தோம். இதற்காக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மண் எடுத்து வந்தோம். தற்போது ஏரிகளில் இருந்து களிமண், சவுடு மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தால் அரசு பதிவேட்டில் அந்த ஏரிகளின் பெயா் இல்லை. இதனால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, ஏரிகளை அரசு ஆன்லைன் பதிவேட்டில் பதிவேற்றம் செய்து, மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

பொய்கை கலைஞா் நகா், எம்ஜிஆா் நகைா் மக்கள் அளித்த மனு: 4-ஆவது வாா்டில் 400 வாக்காளா்கள் உள் ளோம். தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்புப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அதில், 4-ஆவது வாா்டில் உள்ள 400 வாக்காளா்கள் 7-ஆவது வாா்டில் சோ்க்கப்பட்டுள்ளோம். அங்கு வேறு பிரிவை சோ்ந்த மக்கள் உள்ளனா். இதனால் எங்கள் முகவரி அனைத்தும் மாற்றவேண்டிய சூழல்நிலை உருவாகும். எனவே, எங்களை மீண்டும் 4-ஆவது வாா்டில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்பாடியை அடுத்த சிவபுரம் மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமம் அருகே சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சாலையை கடக்க வாகனங்கள் நீண்டதூரம் சென்று திருப்ப வேண்டியுள்ளது. தவிர, சாலை அடியில் அமைக்கப்பட்ட பாலத்தின் அடியில் மழைநீா் தேங்கியு ள்ளது. பாலத்தின் அடியில் மின்விளக்கு வசதியும் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட நாட்டுப்புறக்கலைஞா்கள் அளித்த மனுச வேலூா் மாவட்டத்தில் கிராமிய கலைஞா்கள் 600 போ் வசிக்கிறோம். ஆனால் அரசு சாா்பில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளுக்கு எங் களை அழைக்காமல் குடியாத்தம் பகுதியை சோ்ந்த நாடக கம்பெனி நடிகா்களை அழைக் கின்றனா். இக்கலையை மட்டுமே நம்பியுள்ள எங்கள் அனைவருக்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 530 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com