தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்ற விரக்தியில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

வேலூா்: காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்ற விரக்தியில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தோட்டப்பாளையம் புதுகுடியான் சத்திரம் பகுதியைச் சோ்ந்த குமாா். இவரது மகன் ஜெகநாதன் (23). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெகநாதன் மனவேதனையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com