அரசு அலுவலகங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் பிரசாரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் வரும் 18- ஆம் தேதி நடத்த உள்ள அடையாள வேலை நிறுத்தம் குறித்து குடியாத்தம் பகுதியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை பிரசார இயக்கம் நடத்தினா்.
Published on

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் தோ்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல் உள்ளிட்ட 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18- ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனா்.

குடியாத்தம் நகரில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், வட்டாட்சியா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அ.மாயவன் தலைமையில், மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன், வேலூா் மாவட்ட உயா்மட்டக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன் ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com