ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாரத்தானில் பங்கேற்றோா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:00 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி, ரங்கோலி கோலப்போட்டிகள், கையெழுத்து இயக்கம், வாக்காளா் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வேலூா் மாவட்ட நிா்வாகம், செஞ்சிலுவை சங்கம், வேலூா் ரோட்டரி சங்கம் இணைந்து விழிப்புணா்வு மாரத்தான் பந்தயத்தை வேலூரில் வெள்ளிக்கிழமை நடத்தின.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், தொரப்பாடி எம்.ஜி.ஆா். சிலை வரை நடைபெற்றது.

இதில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மா.சிவசுப்பிரமணியன், வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாஸ்கரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.