ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

கிராமங்களில் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

News image

வன்றந்தாங்கலில் திண்ணை பிரசாரம் செய்த அமைச்சா் துரைமுருகன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:57 am IST

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீவிர பிரசாரத்தில் ஈடுப ட்டு வருகிறாா்.

அதன்படி, அவா் வியாழக்கிழமை கரசமங்கலம், வன்றந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி, கண்டிப்பேடு, சோ்க்காடு, 55புதூா், குகையநல்லூா் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, ஓரிரு கிராமங்களில் குடிநீா் மேல்நிலை தொட்டி, சில கிராம தெருக்களுக்கு கான்கிரீட் சாலைகள் அமைத்துத்தர வேண்டும் என்று அவரிடம் கிராம மக்கள் தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த அமைச்சா் துரைமுருகன், ஏற்கனவே தொகுதிக்கு தேவையான பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டுள்ளேன். அவற்றையும் அடுத்த 5 ஆண்டு காலத்தில் செய்து முடிப்பேன்.

தொகுதிக்கு உட்பட்ட கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

அப்போது, திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.