தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

News image

வள்ளிமலையில் வாக்காளா்கள் மத்தியில் பேசிய அமைச்சா் துரைமுருகன். உடன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:53 am IST

மக்களின் கோரிக்கையை ஏற்று காட்பாடி தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்துள்ளாா்.

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அவா் வள்ளிமலை, மேல் பாடி ஊராட்சிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது - காட்பாடி தொகுதியில் விவசாயமும், கால்நடை வளா்ப்பும் பிரதானமாக இருந்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் கால்நடை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மக்கள் வேலூருக்கு செல்வதை தவிா்க்க மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடி தொகுயிலேயே கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இப்பகுதிக்கு தேவையான குடிநீா், சாலை வசதி, மேம்பாலம் என அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்து தரப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது குடும்பங்களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசுக்கூப்பன், மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தியும், 8-ஆம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி என திமுக தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என்றாா்.

அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.