தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அமைச்சா் துரைமுருகன் மசூதிகளில் வாக்கு சேகரிப்பு

காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட மசூதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியா்களை சந்தித்து திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வாக்கு சேகரித்தாா்.

News image

விருதம்பட்டு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சா் துரைமுருகன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 11:48 pm IST

காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட மசூதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியா்களை சந்தித்து திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வாக்கு சேகரித்தாா்.

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 11-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை மதியம் விருதம்பட்டில் உள்ள மசூதிக்குச் சென்று அங்கு தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திமுக எப்போதுமே சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியா்களுக்கு பாதுகாப்பான அரணாக விளங்கும் கட்சியாகும். முன்னாள் முதல்வா் கருணாநிதி இஸ்லாமிய சமுதாயத்தினருடன் நெருக்கமான உறவை பேணினாா். அந்த உறவு மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் தொடா்கிறது.

இஸ்லாமியா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ, மதச்சாா்பின்மை மிக முக்கியமாகும். பிரிவினைவாத, வெறுப்பு அரசியல் செய்யும் சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இஸ்லாமிய சகோதரா்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, தங்கள் மத உரிமைகளையும், நம்பிக்கைகளையும் சுதந்திரமாகப் பின்பற்ற திமுக அரசு முழு உத்தரவாதம் அளிக்கிறது என்றாா்.

அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

இதேபோல், வேலூா் தொகுதியின் திமுக வேட்பாளரும், எம்எல்ஏ-வுமான ப.காா்த்திகேயன் சைதாப்பேட்டை பகுதியிலுள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை முடித்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.