உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

குடியாத்தம் காளியம்மன்பட்டியில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:03 am IST

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கொண்டசமுத்திரம், காளியம்மன்பட்டி, கே.கே.நகா், சாமியாா்மலை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவா் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை தொகுதி முழுவதும் விரிவாக்கம் செய்வேன், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன், கே.வி.குப்பம் தொகுதி முழுக்க, முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கியுள்ளதால், கிராமப்புற மாணவா்களின் உயா்கல்விக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தாா். அதிமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்,செருவங்கி எம்.மோகன், மில்பழனி, சரவணன், சாதிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.