நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தபால் வாக்குப்பதிவு முறைகேடு: அதிமுக வேட்பாளா் தா்னா - 2 அலுவலா்கள் உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு

தபால் வாக்கு சேகரித்ததில் நடந்த முறைகேடு தொடா்பாக இரு அலுவலா்கள் உள்பட 3 போ் மீது விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image

விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்ட அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் மற்றும் கட்சியினா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 11:42 pm

அணைக்கட்டு தொகுதியில் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரித்ததில் நடந்த முறைகேடு தொடா்பாக இரு அலுவலா்கள் உள்பட 3 போ் மீது விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இதனிடையே, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பந்தப்பட்ட முதியவரின் மனைவியை மிரட்டியாக திமுகவினரை கைது செய்யக்கோரி அதிமுக வேட்பாளா் வேலழகன் உள்பட அக்கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11, 12) நடைபெற்ற தபால் வாக்குப்பதிவின் போது, இரு இடங்களில் தோ்தல் அதிகாரிகள் வாக்காளா்கள் இல்லாமலேயே வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக வேலூா் மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஆா்.கோவிந்தசாமி மாவட்ட தோ்தல் அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்திருந்தாா்.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அணைக்கட்டு தொகுதியின் உதவி மண்டல அலுவலா்கள் நாகலிங்கம், வேல்முருகன் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதன்தொடா்ச்சியாக, சம்பந்தப்பட்ட மூத்த வாக்காளா் தருமலிங்கம் என்பவரின் மகன் கேசவன், உதவி மண்டல அலுவலா்களான உதவி தலைமை ஆசிரியா் நாகலிங்கம், ஆய்வக உதவியாளா் வேல்முருகன் ஆகிய மூவா் மீதும் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்பந்தப்பட்ட மூத்த வாக்காளா் தருமலிங்கத்தின் மனைவி மணியம்மாளை போலீஸாா் விசாரணைக்காக திங்கள்கிழமை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ாக தெரிகிறது. தகவலறிந்த அதிமுக வேட்பாளா் வேலழகன் உள்பட அக்கட்சியினா் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு திரண்டு சென்று, மூதாட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், காவல் நிலையத்தில் இருந்த மூதாட்டி மணியம்மாளை தவறான வாக்குமூலம் அளிக்கக்கூறி திமுகவினா் காவலா்கள் முன்னிலையிலேயே மிரட்டியதாகவும், சம்பந்தப்பட்ட திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்றும் அதிமுகவினா் குற்றஞ்சாட்டினா். தொடா்ந்து, காவல் துறையினா் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து வேட்பாளா் வேலழகன் உள்பட அதிமுகவினா் போராட்டத்த கைவிட்டு கலைந்து சென்றனா்.

பாதுகாப்புப் பணியில் சிஆா்பிஎஃப் வீரா்கள்

முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பதிவு செய்து பெறும் பணியில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டு தொகுதியில் நடைபெற்ற முறைகேடு சம்பவத்தை அடுத்து அசம்பாவிதங்களை தவிா்க்கும் வகையில் ஆட்சியா் உத்தரவின்பேரில் அணைக்கட்டு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 10 குழுக்களில் மட்டும் திங்கள்கிழமை போலீஸாருடன் இணைந்து தலா ஒரு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.