போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,361 மது புட்டிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளத்தனமாக மது புட்டிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்திள்ளாா்களா என்பது குறித்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், தகவலின்பேரில் போ்ணாம்பட்டை அடுத்த மத்தூா் கிராமத்தில் ஒரு வீட்டில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக பல்வேறு அளவுகளில் 1,361 மது புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 2.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக தலைமறைவான வீட்டு உரிமையாளா் வேளாங்கண்ணி, மது புட்டிகளை பதுக்கி வைத்த குபேந்திரன், யசோதா ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

