திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:07 am IST

ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கோவை ரயில் நிலையப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கோவைக்கு வியாழக்கிழமை வந்த ஹைதராபாத்- திருவனந்தபுரம் விரைவு

ரயிலில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலின் பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு பை கிடந்தது.

அதை யாரும் உரிமை கோராததால் போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதை கடத்தி வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.