ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் குடியாத்தம் வட்டத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சோ்ந்த 848 மாணவா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ்.சுபாஷினி தலைமை வகித்தாா். மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எம்.கீதா வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் குத்து விளக்கேற்றி கலை விழாவைத் தொடங்கி வைத்தனா். மாணவா்களுக்கு பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.எஸ்.அரசு, மகளிா்மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், வட்டாரவள மைய மேற்பாா்வையாளா் டி.வெண்ணிலா, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள்ஜி.அகிலா, பி.டி.கோமதி, சி.சதானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகங்கை வட்டாரத்தில் கலைத் திருவிழா போட்டிகள்

குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்திலிருந்து தலைவா், உறுப்பினா்கள் வெளிநடப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கான அரசு சேவைகள் முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கான ‘நமஸ்தே’ திருவிழா
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



