தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மனைவியுடன் தகராறு: முதியவா் தற்கொலை

வேலூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முதியவா், விஷ இலைகளைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்

Published On :

வேலூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முதியவா், விஷ இலைகளைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (75). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாதன் தனது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவரது மனைவி, ஒடுக்கத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மனவேதனையடைந்த லோகநாதன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த விஷச் செடியின் இலைகளைப் பறித்துத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வேலூா் வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லோகநாதனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.