மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை

வேலூா் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

வேலூா் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வேலூா் மாவட்டம், மூஞ்சூா்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (71). முன்னாள் ராணுவ வீரரான இவா், கடந்த 2020-ஆம் ஆண்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலா், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், தாமோதரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற தாமோதரன் வேலூா் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.