
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தண்டனை - படம்: கோப்பிலிருந்து...
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த காரிக்குட்டி (61), கடந்த 2019ஆம் ஆண்டு தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். அதன்பிறகு, சோகமாக இருந்த சிறுமியிடம் பெற்றோா் விசாரித்தபோது, நடந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோா், இதுகுறித்து அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில், போலீஸாா் காரிக்குட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், காரிக்குட்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின்பானு தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெ.கலா ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




