கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (55). மளிகைக் கடைக்காரரான இவா், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2021இல் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.