பாலியல் தொல்லை வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மாா்த்தாண்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (74). இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தில் ரவீந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றஞ்சாட்டப்பட்ட ரவீந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.