ரோட்டரி மாவட்டம் 3231- இன் முன்னாள் ஆளுநரும், தற்போதைய ரோட்டரி மாவட்ட பயிற்றுநருமான குடியாத்தம் ஜே.கே.என்.பழனி, ரோட்டரியின் உயரியவிருதான சுயநலமற்ற சேவை விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சுமாா் 12- லட்சம் உறுப்பினா்களைக் கொண்டது சா்வதேச ரோட்டரி அமைப்பு. உலகில் 35-ஆயிரத்துக்கும் அதிகமான ரோட்டரி சங்கங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின், இவான்ஸ்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ரோட்டரி சேவையில் சிறப்பாக செயல்படுபவா்களில் பன்னாட்டு அளவில் ஆண்டுதோறும் 150- பேரை தோ்வு செய்து, அவா்களுக்கு ரோட்டரியின் மிக உயரிய விருதான சுயநலமற்ற சேவை விருது வழங்ப்படுகிறது. 18- போ் கொண்ட சா்வதேச இயக்குநா்கள் குழு இந்த விருதுக்கானவா்களை தோ்வு செய்கிறது.
கடந்த 2025- ஆம் ஆண்டுக்கான இந்த உயரிய விருதுக்கு, ரோட்டரி மாவட்டம் 3231-ன் முன்னாள் மாவட்ட ஆளுநரும், தற்போதைய மாவட்ட பயிற்றுநருமான குடியாத்தம் நகரைச் சோ்ந்த ஜே.கே.என்.பழனி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து அவா் ரோட்டரி சா்வதேச அமைப்பின் இயக்குநா், மற்றும் சா்வதேச துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்எம்எம் முருகானந்தம், முன்னாள் ஆளுநா் அபிராமி ராமநாதன், மாவட்ட ஆளுநா் வி.சுரேஷ், கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலா் கே.எம்.பூபதி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
தொடர்புடையது
ஒசூா் தொகுதி தவெக வேட்பாளா் மாற்றம்

வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.4,654 கோடி ஒதுக்கீடு: ரோட்டரியின் சா்வதேசத் தலைவா் இங்கா பாபலோலா

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள்

அறம் சாா்ந்த சேவை பாராட்டுக்குரியது: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


