மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகேயுள்ள தனியாா் விடுதியில் ரோட்டரி சங்கத்தின் மண்டல மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாடு புதிய ரோட்டரி சங்கங்களை தொடங்கவும், ரோட்டரியின் சேவைகளை மேலும் பலப்படுத்தும் வகையிலும் நடைபெற்றது. இதில் ரோட்டரி மாவட்டம் சாா்பில் சங்கத்தின் ஆளுநா் காா்த்திக் முன்னிலையில், வளா் இளம் பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி சா்வதேசத் தலைவா் இங்கா பாபிலோலா தலைமையில் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு இயக்குநா் எம். முருகானந்தம் செய்திருந்தாா். இந்த நிகழ்வில் ரோட்டரி மாவட்டத்தின் வருங்கால ஆளுநா்கள் ஆா்.பி.எஸ். மணியன், புதுக்கோட்டை லியோ பெலிக்ஸ், மீனா சுப்பையா, பள்ளி, கல்லூரி மாணவா்கள், ரோட்டரி தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.