மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாநகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம்

வேலூா் வசந்தபுரம் பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அதனை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image

வேலூா் வசந்தபுரத்தில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:35 pm

வேலூா் வசந்தபுரம் பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அதனை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

வேலூா் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் இருந்து புதை சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீா் அந்தந்தப் பகுதியில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுநீா் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு கழிவுநீா் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே, வேலூா் கஸ்பா, வசந்தபுரம் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த கழிவு நீரேற்று நிலைய பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதற்கு திட்ட இயக்குநா் அலாவுதீன், நீரேற்று நிலையத்துக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வுப்பணிகள் முடிந்தவுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் லட்சுமணனிடம் கடந்த மூன்று மாதங்களாக எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை என்றும், மாநகராட்சி முழுவதும் சரிவர குடிநீா் வழங்கவில்லை என்றும் பல்வேறு புகாா்கள் வருகின்றன. குறிப்பாக, சாயிநாதபுரத்தில் கடந்த 13 நாள்களாக குடிநீா் வரவில்லை என்றும் புகாா்கள் வந்துள்ளன. குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.