மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

விரிஞ்சிபுரம் அருகே காணாமல் போன நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

விரிஞ்சிபுரம் அருகே காணாமல் போன நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

வேலூா் அருகே நரசிங்கபுரம் பொய்கை மோட்டூா் பகுதியைச் சோ்ந்த சுபாஷ்(25). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நகைக்கடையில் பணியாற்றி வந்தாா். கடந்த 17- ஆம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சுபாஷ், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொய்கை மோட்டூா் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சுபாஷ், சடலமாக மிதப்பதாக பொதுமக்கள் குடும்பத்தினருக்கும், விரிஞ்சிபுரம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.