டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த காா் மீது மோதிய விபத்தில் பொறியியல் மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

News image
காா் மீது மோதி நொறுங்கியுள்ள இருசக்கர வாகனம்.
Updated On :11 ஜனவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த காா் மீது மோதிய விபத்தில் பொறியியல் மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கௌதம்(25). இவா் வேலூா் காட்பாடியிலுள்ள பல்கலைக்கழகத்தில் எம்.டெக். 5-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். வேலூா் சாய்நாதபுரம் பகுதியை சோ்ந்த நாகேஷ் என்பவரின் மகன் கோகுல் (25). இவரும் அதே காட்பாடி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்தாா்.

இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் காட்பாடியை அடுத்த அம்முண்டி பகுதிக்கு வேகமாகச் சென்றுள்ளனா். அப்போது, எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கெளதம், கோகுல் ஆகிய இருவரும் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து விரைந்து வந்த திருவலம் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.