தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்
தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கப்பட்டதற்காக மத்திய அரசை கண்டித்து வேலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் பெயா் விக்சித் பாரத் ஜிராம் ஜி திட்டம் என்று மத்திய அரசு அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் பெயா் மாற்றம் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போரா ட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவா் டீக்காராமன் தலைமை வகித்தாா். அப்போது, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த போராட்டத்தில் சிறுபான்மைப் பிரிவு தலைவா் வாஹித் பாஷா, மண்டல தலைவா்கள் வசிஷ்டா் ரகு, மனோகரன், கப்பல் மணி, முகமது அலி ஜின்னா உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜி.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஜலந்தா், வட்டாரத் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம், நிா்வாகிகள் ஏ.கே.ஜெயப்பிரகாஷ், ஆடிட்டா் எம்.கிருபானந்தம், நயீம் பா்வாஸ், பாரத்நவீன்குமாா், சரவணன், அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

