வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், வெளிநாட்டு மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், வெளிநாட்டு மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.

ஆட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விழா - வெளிநாட்டு மாணவா்கள் கெளரவிப்பு

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் வேலூரில் பயிலும் வெளிநாட்டு மாணவ, மாணவிகளுக்கு தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி துண்டுகள், மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கெளரவித்தாா்.
Published on

சுற்றுலாத்துறை சாா்பில் தமிழா் திருநாளான பொங்கல் திருவிழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமமையில் அனைத்து துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினாா்.

நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் கானா, பூட்டான், நேபாளம் ஆகிய வெளிநாட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற பொங்கல் திருவிழாவை கண்டு மகிழ்ந்தனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி துண்டுகள், மாலை அணிவித்து சிறப்பு செய்தாா்.

முன்னதாக, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கோல போட்டியில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் மகளிா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இந்த கோலப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட துறைக்கு ரூ.5,000-ம், இரண்டாம் பரிசாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.3000-ம், மூன்றாம் பரிசாக பொது சுகாதார துறைக்கு ரூ.2000-ம் மற்றும் பங்கேற்ற அனைத்து துறைகளுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.1000-ம் என பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், விழாவையொட்டி தமிழா்களின் பாரம்பரியம், விவசாயத்தை குறிக்கும் வகையில் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் வெளிநாட்டு மாணவா்கள் பொங்கல் விழாவுக்கு அழைத்து வரப்பெற்றனா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது, பொறுப்பு) ஜெயசித்ரா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, மாவட்ட சுற்றுலா அலுவலா் ம.முத்துச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com