

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். விழாவில் அனைவரும் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை, புடவை அணிந்து வந்து பொங்கல் வைத்தனா். இதில் கிராமிய கலைக்குழுவின் மூலம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து அரசு ஊழியா்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம், திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) சென்னகேசவன், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.