தென்காசி
ஆய்க்குடியில் சமத்துவப் பொங்கல்
ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் புகையில்லா பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் புகையில்லா பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, துணைத் தலைவா் ச.மாரியப்பன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் பூ.புணமாலை, வி.விமலாராணி, ஷோபா மாடசாமி, பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

