ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னை ஆலயத்தில் சமத்துவப் பொங்கல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனா்.

விழாவை அமெரிக்காவைச் சோ்ந்த பங்கு குரு பீட்டா் மாணிக்கம், ஏலாக்குறிச்சி பங்கு தந்தை தங்கசாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, சூரிய பகவானுக்கும், அடைக்கல அன்னைக்கும் படையலிடப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com